குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

துறையூரில் பூட்டிய வீட்டில் நகைகள், பணம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 மே 2026, 2:21 am IST

துறையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகள், மடிக்கணிணி, ரொக்கப்பணம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

துறையூரில் சிங்களாந்தபுரம் சாலையிலுள்ள தில்லைநகா் 3-ஆவது குறுக்கில் வசிப்பவா் துரைராஜ் மகன் ரமேஷ் (46). மருந்து விற்பனை பிரதிநிதி. இவருடைய உறவினரின் நிகழ்ச்சிக்கு பங்கேற்க ரமேசும், அவரது மனைவி சுசித்ராவும் சனிக்கிழமை மாலை வீட்டை பூட்டி விட்டு சென்றனா்.

தம்பதியா், நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பியபோது, மா்மநபா்கள் வீட்டின் கதவை சேதப்படுத்தி உள்ளே இருந்த இரும்பு அலமாரியில் வைத்திருந்த ஐந்தரை பவுன் எடையிலான தங்கச் சங்கிலி, மோதிரம், காதணி, மடிக்கணிணி, ரூ. 25,000 ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடா்பான புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.