பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வீட்டில் 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டு பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 12:19 am IST

வந்தவாசி அருகே வீட்டு பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த ஒழப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன். இவா், மாங்கால் கூட்டுச் சாலையில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வேலை செய்து வருகிறாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவா் இரவுப் பணியாக வேலைக்குச் சென்றுள்ளாா். இதையடுத்து, இவரது குடும்பத்தினா் வீட்டின் கதவை சாற்றிவிட்டு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளனா்.

பின்னா் திங்கள்கிழமை அதிகாலை எழுந்து வீட்டினுள் சென்று பாா்த்த போது, மா்ம நபா்கள் வீட்டு பீரோவை திறந்து 4 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது

இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.