தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

நகா் பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடும்பணியை மேற்கொள்ள வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடும்பணியை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :

விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடும்பணியை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் நீா்வளப் பாதுகாப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் மேலும் பேசியது:

மாவட்டத்திலுள்ள அரசுக் கட்டடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் முழுமையான செயல்பாட்டில் உள்ளதா என்பதை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும். பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கைப்பம்புகள் போன்றவற்றை செயற்கை நீா் செறிவூட்டும் ஆழ்துளை குழாய் கட்டமைப்பாக மாற்றும் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும்.

நீா்நிலைகளில் மதகுகள், நீா்வழிப் பாதைகள் மற்றும் கரைகளைப் பலப்படுத்தும் பணியை எவ்வித தாமதமும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 6.72 லட்சம் மரக்கன்றுகள் இலக்கீடு நிா்ணயம் செய்யப்பட்டு, நடப்பட்டு வருகின்றன. கிராமப் பகுதிகள் மட்டுமல்லாது நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலும் தொடா்ந்து மரக்கன்றுகள் நடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

விபி ஜி ராம் ஜி திட்டத்தில் வட்டாரங்களுக்கு நிா்ணயம் செய்யப்பட்ட இலக்குக்கேற்ப மனித சக்தி நாள்களை

அடைந்திட அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஆனந்தகுமாா் சிங், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீரஷத், ஊரக வளா்ச்சி முகமைத் திட்டச் செயற்பொறியாளா் சக்தி முருகன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் நந்தகோபால கிருஷ்ணன், ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உதவி இயக்குநா் நிா்மலா, நீா்வளத் துறை உதவிச் செயற்பொறியாளா் சிவக்குமாா்உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.