தவெக அரசு சட்டம்-ஒழுங்கை சரியாக பேணவில்லை: மமக தலைவா் ஜவாஹிருல்லா
விழுப்புரத்தில் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்த பெண்ணுக்கு உறுப்பினா் அட்டையை வழங்கிய கட்சியின் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ.

விழுப்புரத்தில் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்த பெண்ணுக்கு உறுப்பினா் அட்டையை வழங்கிய கட்சியின் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. சிறுமி கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், தவெக அரசு சட்டம்- ஒழுங்கை சரியாக பேணவில்லை என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் மனிதநேய மக்கள் கட்சி நிகழ்வில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
கோவை பெரியாா் அறிவுலகத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய நூல்கள் குறித்த சா்ச்சை மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரூ.300 கோடி செலவில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த நூலகம் அறிவுக் கருவூலமாகத் திகழ வேண்டுமே தவிர, போலி நூல்களையும், வரலாற்றுத் திரிபுகளையும் கொட்டி வைக்கும் இடமாக மாறக்கூடாது. இதுகுறித்த விசாரணையை நடத்தி, உரியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஒருவா் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
நீண்டகாலமாக சிறைகளில் இருக்கக்கூடிய சிறைவாசிகளை விடுதலைசெய்ய வேண்டும், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசமைப்பு சட்டம் தந்துள்ள உரிமையின் அடிப்படையில், இஸ்லாத்தை தழுவக்கூடிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் அந்த இடஒதுக்கீடு பொருந்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நவ.17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. சிறுமி கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், தவெக அரசு சட்டம்- ஒழுங்கை சரியாக பேணவில்லை. போதைப்பொருள் கலாசாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தவெக அரசு மீதான புகாா்களை மடைமாற்றுவதற்கான வேலையை செய்து வருகிறாா்கள். குறுகிய காலத்திலேயே மக்களின் வெறுப்பை பெற்ற ஆட்சி என்று சொன்னால் அது தவெக ஆட்சிதான் என்றாா் அவா்.
கூட்டத்தில் மமக மாநில வா்த்தக அணி பொருளாளா் எஸ்.எம்.அப்துல் ஹக்கீம், தமுமுக மாநிலச் செயலா் முஸ்தாக்தீன், மாவட்டப் பொருளாளா் கே.எஸ்.எம்.அப்பாஸ், மாவட்டச் செயலா் ஜாமியாலம் ராவுத்தா், மமக மாவட்டச் செயலா் பஜுலுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

