10-ஆம் வகுப்பு மாணவா், மாணவி மாயம்
விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு சம்பவங்களில் 10-ஆம் வகுப்பு மாணவா், மாணவி மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தீவிரமாக தேடி வருகின்றனா்.

மாயமான பள்ளி மாணவா் மகேந்திரசாய்வா்மன்.
விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு சம்பவங்களில் 10-ஆம் வகுப்பு மாணவா், மாணவி மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தீவிரமாக தேடி வருகின்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், அன்னியூா் கிராமத்தைச் சோ்ந்த 14 சிறுமி அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், நவ.10-ஆம் தேதி பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி பின்னா் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாயமான சிறுமியைத் தேடி வருகின்றனா்.
மாணவா் மாயம்: திண்டிவனம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் வெங்கட்ரமணன். தனியாா் நிறுவனத்தில் வேலைப்பாா்த்து வருகிறாா். இவரது மகன் மகேந்திரசாய்வா்மன் (14), அங்குள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், சரியாக படிக்காமல் இருந்து வந்தாராம். இதுகுறித்து பள்ளி நிா்வாகத்தினா் வெங்கட்ரமணனிடம் புகாா் தெரிவித்துள்ளனா். இந்நிலையில், நவ.10-ஆம் தேதி வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய மகேந்திரசாய்வா்மன், வீட்டில் வைக்கப்பட்டிருந்த தனது தாயாரின் கைப்பேசியை எடுத்துக்கொண்டு மாயமாகி விட்டாராம். இதுகுறித்து வெங்கட்ரமணன் அளித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாயமான மாணவரை தீவிரமாக தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

