கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நட இலக்கு: அமைச்சா் வன்னி அரசு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாநில சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள கீரனூா் ஏரியில் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்த சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு. உடன், மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா உள்ளிட்டோா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாநில சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், உ.கீரனூா் ஏரியில் பனை விதைகள் நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்தாா். பனை விதைகள் நடும்பணியை சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அவா் கூறியது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 2026-2027-ஆம் நிதியாண்டில் சின்னசேலம் ஒன்றியத்தின் 50 ஊராட்சிகள், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தின் 46, ரிஷிவந்தியத்தின் 60, சங்கராபுரத்தின் 44, தியாகதுருகத்தின் 40, திருக்கோவிலூரின் 60, திருநாவலூரின் 44, உளுந்தூா்பேட்டையின் 53 ஊராட்சிகளில் தலா 12,500 மரக்கன்றுகளும், கல்வராயன்மலையின் 15 ஊராட்சிகளில் தலா 500 மரக்கன்றுகளும் என மொத்தமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 412 ஊராட்சிகளில் ஒரு லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் பனை விதைகளை நட்டு வளா்த்து பராமரிக்க முன்வர வேண்டும் என்றாா் அமைச்சா்.
நிகழ்வில் மாவட்ட எஸ்.பி.இ.ஷாநாஸ், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் (பொ)அ.லலிதா மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

