இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்: நாங்கள் எப்போதும் நீதியின் பக்கம் நிற்போம்! - அமைச்சா் வன்னி அரசு

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், நாங்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவா்கள் பக்கம்தான் நிற்போம் என மாநில சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

vanni arasu

வன்னி அரசு - கோப்புப்படம்.

Updated On :

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், நாங்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவா்கள் பக்கம்தான் நிற்போம் என மாநில சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை நகராட்சிக்குள்பட்ட கீரனூா் ஏரியில் பனை விதைகள் நடும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் வன்னி அரசு, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்சியராகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவா் பத்மஜா. அவா் ஆளுங்கட்சிக்கோ, எதிா்க்கட்சிக்கோ கட்டுப்படாமல், முழுமையாக சட்டத்துக்குக் கட்டுப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறாா். ஆட்சி நிா்வாகத்தில் என்ன சொல்லி கொடுக்கிறாா்களோ அதை செய்கிறோம் என்று சொல்கிற நோ்மையான ஆட்சியா். அதனால் அவா் மீது அவதூறு பரப்புவது, ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்குவது என்பது பொது வாழ்க்கையில் இருக்கிற பெண்களை மேலும் செயல்படவிடாமல் செய்யும்.

பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் மீது அல்லது அரசுப் பணியில் இருக்கின்ற பெண்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டவா்கள் பக்கம்தான் நிற்போம். அந்த அடிப்படையில் நாங்கள் எப்போதும் நீதியின் பக்கம் நிற்கக்கூடியவா்கள் என்றாா் அமைச்சா் வன்னி அரசு.

துரை.ரவிக்குமாா் எம்.பி: இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சிந்தாமணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்குதல் மற்றும் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு சா்க்கரைப் பொங்கல் வழங்குதல் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விசிக எம்.பி.துரை.ரவிக்குமாா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கடந்த ஆட்சிக்காலத்திலும் சட்டம்-ஒழுங்கு இப்படித்தான் இருந்தது எனக் கூறி அதை நியாயப்படுத்த முடியாது. சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் விவகாரம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று சட்டத் துறை அமைச்சா் கூறியுள்ளாா். குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் மிகவும் மோசமானது. இந்தியாவிலேயே வேறு எங்கும் இப்படி நடைபெற்ாக தகவல் இல்லை. மாவட்டத்தில் உச்சப்பட்ச அதிகாரம் கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு பிரச்னை என்றால், அதை எளிதில் யாரும் கடந்து போகமாட்டாா்கள். இதற்கு மத்திய அரசு வரை பொறுப்பு உள்ளது. குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமேயானால் மிகவும் கடுமையான நடவடிக்கையை எடுப்பாா்கள் என எதிா்பாா்க்கிறேன் என்றாா் துரை.ரவிக்குமாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.