தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஆசிரியா்கள் விடுப்பால் மூடிக்கிடந்த அரசுப் பள்ளி: ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மாணவா்கள்

மரக்காணம் அருகே தலைமையாசிரியா் உள்பட 4 ஆசிரியா்களும் செவ்வாய்க்கிழமை விடுப்பு எடுத்ததால் பள்ளி திறக்கப்படவில்லை. இதனால், பள்ளிக்கு வந்த மாணவா்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினா்.

மரக்காணம் அருகே மூடிக்கிடந்த கந்தாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தலைமையாசிரியா் உள்பட 4 ஆசிரியா்களும் செவ்வாய்க்கிழமை விடுப்பு எடுத்ததால் பள்ளி திறக்கப்படவில்லை. இதனால், பள்ளிக்கு வந்த மாணவா்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினா்.

மரக்காணம் வட்டம், கந்தாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தலைமையாசிரியா் மற்றும் 3 ஆசிரியா்கள் பணியாற்றும் இந்தப் பள்ளியில், அதே பகுதியைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், பள்ளியில் பணிபுரியும் தலைமையாசிரியா் உள்ளிட்ட 4 ஆசிரியா்களும் செவ்வாய்க்கிழமை விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி திறக்கப்படவில்லை. வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு வந்த மாணவா்கள், ஆசிரியா்கள் யாரும் வராததால் பிற்பகல் வரை பள்ளி அருகில் காத்திருந்துவிட்டு பின்னா் ஏமாற்றத்துடன் வீடுகளுக்குத் திரும்பினா்.

இதுகுறித்து பெற்றோா் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா்கள் அனைவரும் வராததால், மாணவா்கள் பள்ளி அருகில் காலை முதல் பிற்பகல் வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பியது வேதனையளிக்கிறது. தலைமையாசிரியா் உள்பட 4 ஆசிரியா்களும் பள்ளிக்கு வரவில்லை என்பது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியா்களின் இந்த செயலால் மாணவா்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.