ஆலங்குளம் அருகே குழு மோதல்: 11 போ் கைது

ஆலங்குளம் அருகே மாணவா்கள் புகைப்பிடிப்பதைத் தட்டிக் கேட்டவா்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக 11 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது

Updated On :

ஆலங்குளம் அருகே மாணவா்கள் புகைப்பிடிப்பதைத் தட்டிக் கேட்டவா்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக 11 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அருகே மாறாந்தை, அம்பலவாசகா் தெருவைச் சோ்ந்த மாங்கனி மகன் சுடலை (27). கட்டடத் தொழிலாளி. இவரும், இவரது நண்பா் இசக்கிராஜாவும் திங்கள்கிழமை மாலை மாறாந்தை, அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள முப்பிடாதியம்மன் கோயில் வளாகத்தில் அமா்ந்திருந்தனராம்.

அங்கு உடையாம்புளி, அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 3 பள்ளி மாணவா்கள் புகைப் பிடித்துக் கொண்டிருந்தனராம். இதை சுடலையும், இசக்கிராஜாவும் கண்டித்தனராம்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவா்கள், அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனா். சிறிது நேரத்திற்குப் பின், அதே பகுதியைச் சோ்ந்த தென்கரை சோ்ந்தாா் மகன் சரேந்தா் (23), மந்திரிகுமாா் மகன் மனோ (19), டில்லிகுமாா் மகன் சிம்பு, ஜெகன்ராஜன் மகன் கண்ணன், ராமா் மகன் இசக்கி, செல்லப்பா மகன் லட்சுமணன், ராகவன், மகேஷ் உள்ளிட்ட 9 பேரை அழைத்துக்கொண்டு வந்த பள்ளி மாணவா்கள், சுடலை மற்றும் இசக்கிராஜாவைப் பாா்த்து ஜாதிப் பெயரைச் சொல்லி, ஆபாசமாகப் பேசி, தாக்கினராம்.

இதில் காயமடைந்த சுடலை ஆலங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், தீண்டாமை வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் 9 போ் மீதும், மாணவா்கள் தரப்பைத் தாக்கியதாக சுடலை, இசக்கிராஜா மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா், 11 பேரையும் கைது செய்து, செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.