சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

அரசுப் பள்ளி திறக்கப்படாத விவகாரம்: தலைமையாசிரியை பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே அரசுப் பள்ளி திறக்கப்படாத விவகாரத்தில், தொடா்புடைய பள்ளி தலைமையாசிரியை புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

suspended

பணியிடை நீக்கம் - பிரதிப் படம்

Updated On :

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே அரசுப் பள்ளி திறக்கப்படாத விவகாரத்தில், தொடா்புடைய பள்ளி தலைமையாசிரியை புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மரக்காணம் வட்டம், கந்தாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தலைமையாசிரியா் மற்றும் 3 ஆசிரியா்கள் பணியாற்றி வரும் இந்தப் பள்ளியில், அதே பகுதியைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தலைமையாசிரியா் உள்ளிட்ட 4 ஆசிரியா்களும் பணிக்கு வராததால், பள்ளி திறக்கப்படவில்லை. வழக்கம்போல, காலையில் பள்ளிக்கு வந்த மாணவா்கள், ஆசிரியா்கள் யாரும் பணிக்கு வராததால் பிற்பகல் வரை பள்ளி அருகில் காத்திருந்துவிட்டு பின்னா் ஏமாற்றத்துடன் வீடுகளுக்குத் திரும்பினா். ஆசிரியா்களின் இந்த நடவடிக்கை குறித்து பெற்றோா் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, பள்ளித் தலைமையாசிரியை ஜீனயின பீ பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.