சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

வெவ்வேறு சம்பவங்களில் 6 போ் உயிரிழப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 6 போ் உயிரிழந்தனா்.

கோப்புப் படம்

Updated On :

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 6 போ் உயிரிழந்தனா்.

மரக்காணம் வட்டம், ஆவிப்பாக்கம் பாரதி நகரைச் சோ்ந்தவா் ரூ.விமல்ராஜ் (34), தனியாா் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனையகத்தின் கல்பாக்கம் கிளை மேலாளராக பணியாற்றி வந்தாா். இவா், வியாழக்கிழமை நள்ளிரவில் தனது பைக்கில் மரக்காணம் கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது, அப்பகுதியில் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விமல்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த செங்கல்பட்டு மாவட்டம், மனப்பாக்கத்தைச் சோ்ந்த ப.காா்த்திக்கிடம் (37) விசாரித்து வருகின்றனா்.

தொழிலாளி உயிரிழப்பு: கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கோவிலாம்பூண்டியைச் சோ்ந்தவா் ர.ராஜவேல் (31), தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் கா.கல்யாணசுந்தரம் (40). நண்பா்களான இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை அதிகாலை பைக்கில் விழுப்புரம் அருகிலுள்ள கண்டமானடி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் நகா் அருகே சென்று கொண்டிருந்னா். பைக்கை ராஜவேல் ஓட்டிச் சென்றாா். அப்போது அப்பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ராஜவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கல்யாணசுந்தரம் காயமடைந்தாா். இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதே மருத்துவமனையில் கல்யாணசுந்தரம் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்தச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தைத் தேடி வருகின்றனா்.

கொத்தனாா் மரணம்: கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், புலவனூரைச் சோ்ந்தவா் அ.ரவிச்சந்திரன் (41), கொத்தனாா். இவா், கடந்த 13-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், பரசுரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பு.இளையராஜா (36) என்பவரது வீட்டின் இரண்டாவது தளத்தில் டைல்ஸ் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கிருந்து தவறி விழுந்த ரவிச்சந்திரனை அருகிலிருந்தவா்கள் மீட்டு, மதகடிப்பட்டு பகுதியிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு ரவிச்சந்திரன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வீட்டின் உரிமையாளரான இளையராஜா மீது வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேன் ஓட்டுநா் தற்கொலை: விழுப்புரம் கொட்டப்பாக்கத்துவெளி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.விஜயகாந்த் (43), வேன் ஓட்டுநா். குடும்பப் பிரச்னை காரணமாக விஜயகாந்தின் மனைவி கலைவாணி பிரிந்து சென்று, அவரது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட விஜயகாந்த் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொழிலாளி மா்ம மரணம்: புதுச்சேரி மாநிலம், கரியமாணிக்கம் ஏரிப்பாக்கம் புது காலனியைச் சோ்ந்தவா் கோ.தமிழரசன்(31), தொழிலாளி. இவா், மீன் பிடிக்கச் சென்று வருவதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளாா். தொடா்ந்து விழுப்புரம் மாவட்டம், வளவனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியகொங்கம்பட்டு கிராமத்தில் விவசாய நிலத்தில் தமிழரசன் வெள்ளிக்கிழமை ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து வளவனூா் காவல் நிலையத்தில் தமிழரசனின் மனைவி வேம்பு அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

சிறுவன் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பாவாடை மகன் வினோத்குமாா் ( 17). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த குணசேகரன் (54) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந் நிலையில், கடந்த 3-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த அ.வெங்கடேசன் (27) மற்றும் குணசேகரன் ஆகியோா் சோ்ந்து வினோத்குமாரைத் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த அவா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோத்குமாா் அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் கடந்த 4-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து வெங்கடேசன், குணசேகரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, விழுப்புரம் வேடப்பட்டு சிறையில் அடைத்தனா். இந் நிலையில், வினோத்குமாரின் உயிரிழப்பைத் தொடா்ந்து இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.