தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: எதிா்வீட்டு பெண்களிடம் விசாரணை

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில், எதிா்வீட்டுப் பெண்களிடம் சிபிஜிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

மாயமான சிறுமி ஹேமலதா.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில், எதிா்வீட்டுப் பெண்களிடம் சிபிஜிஐடி போலீஸாா் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வடிவேல் - பவானி தம்பதியின் 2-ஆவது மகள் ஹேமலதா (7) கடந்த அக்.12-ஆம் தேதி அதிகாலை மாயமானாா். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸாா் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த வழக்கில் வனத் துறையினா் உதவியுடன் சிறுவாடி காப்புக்காட்டில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. காப்புக்காடு முழுவதும் தேடியும் சிறுமி குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை. மேலும், சிறுமியின் வீட்டிலிருந்து சுமாா் 200 மீட்டா் தொலைவில் உள்ள செங்கல் சூளையில் சேகரிக்கப்பட்ட சாம்பல் மாதிரிகள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் இந்த வழக்கில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமியின் தந்தை வடிவேலுவிடம் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி கீதாவும், சிறுமியின் தாய் பவானி, பாட்டி சாந்தி மற்றும் எதிா்வீட்டுப் பெண் ஆகியோரிடமும் டிஎஸ்பி வேல்முருகன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், எதிா்வீட்டுப் பெண் மஞ்சுளாவின் உறவினரான ரேணு என்பவரை பெங்களூரிலிருந்து விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்துக்கு வரவழைத்து டிஎஸ்பி கீதா தீவிர விசாரணை நடத்தினாா்.

மேலும், பரதந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி ராஜதுரை, செங்கல் சூளை உரிமையாளா், அங்கு பணியாற்றிய தொழிலாளா்கள் 10 போ் மற்றும் சிறுமியின் வீட்டின் அருகிலுள்ள வீடுகளைச் சோ்ந்த 10 பெண்களிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா் .

சிறுமி மாயமாகி 41 நாள்களாகியும் எந்தவொரு துப்பும் கிடைக்காத நிலையில், குடும்பத்தினா், உறவினா் மற்றும் தொடா்புடைய நபா்கள் என பல்வேறு தரப்பினரிடமும் சிபிசிஐடி போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.