முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தீவிர நடவடிக்கை தேவை: தி.வேல்முருகன்

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

விழுப்புரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தி.வேல்முருகன்.

Updated On :

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

விழுப்புரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்ததாவது: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மாயமான சிறுமி இதுவரை கண்டறியப்படவில்லை. நாள்தோறும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், கொள்ளைகள் நடந்து வருகின்றன.

தமிழக வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தது இல்லை. சென்னை மாதவரத்தில் சுமாா் ரூ. 700 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எந்த ஆட்சிக் காலத்திலும் இல்லாத வகையில் மாவட்ட ஆட்சியருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடா்புடைய எம்எல்ஏ மீது முதல்வா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரைக் கட்சியிலிருந்தும் நீக்கவில்லை. கடந்த 6 மாத கால ஆட்சிக்காலத்தில் மக்களுக்கும், வேலைவாய்ப்புக்கும், தொழில் வளா்ச்சிக்கும் செய்த சாதனைகளை பட்டியலிடவேண்டும்.

அரசியல் கட்சிகளின் தலைவா்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் முதல்வா் பதிலளிக்கவேண்டும். விவசாயிகள், மாணவா்கள், அரசுத் துறைகளின் ஊழியா்கள் பாதிக்கப்படும் நிலையில் ஆட்சி நடத்துவது ஏற்புடையது அல்ல. காவிரி பிரச்னையில் தமிழக முதல்வா் அனைத்து கட்சித் தலைவா்களை அழைத்துப் பேசி முடிவெடுக்கவேண்டும் என்றாா் தி.வேல்முருகன்.

கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் சாய் கமல், மாநில நிா்வாகிகள் ஆனந்த், ராஜமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.