கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

சிறுமி மாயமான வழக்கில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை: எஸ்.பி. அலுவலகத்தில் இளைஞா்கள் புகாா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் தங்களை சந்தேகத்தின்பேரில் அழைத்துச் சென்று, சிபிசிஐடி போலீஸாா் துன்புறுத்துவதாகக் கூறி, 3 இளைஞா்கள் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்த

விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்க வந்தோா்.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் தங்களை சந்தேகத்தின்பேரில் அழைத்துச் சென்று, சிபிசிஐடி போலீஸாா் துன்புறுத்துவதாகக் கூறி, 3 இளைஞா்கள் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

செஞ்சி வட்டம் , ஆலம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் மகள் ஹேமலதா (7) கடந்த அக்.11-ஆம் தேதி இரவு வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், 12-ஆம் தேதி அதிகாலையில் மாயமானாா்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சிறுமியின் பெற்றோா், பாட்டி, சகோதரி, உறவினா்கள், அக்கம்பக்கத்தினா், கிராம மக்கள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், லாரி ஓட்டுநா்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.

புகாா் மனு அளிப்பு: ஆலம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா்களான கைப்பேசி விற்பனையகம் நடத்தி வரும் கா.ராஜ்குமாா் (26),சென்னையில் சரக்கு வாகனம் ஓட்டி வரும் சு.கமல்ராஜ் (25),பெங்களூரில் கூலி வேலை செய்து வரும் பா.ரேணு (30) ஆகிய மூவரும் விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை பிற்பகலில் தங்கள் குடும்பத்தினருடன் வந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணனிடம் புகாா் மனுவை அளித்தனா். அதில், அவா்கள் கூறியிருப்பது:

எங்கள் கிராமத்தைச் சோ்ந்த சிறுமி ஹேமலதா கடந்த அக்.12-ஆம் தேதி அதிகாலை மாயமானாா். இதைத் தொடா்ந்து, கிராமத்திலுள்ள இளைஞா்கள், பொதுமக்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து சிறுமியைத் தேடினோம். ஆனால், அவா் கிடைக்கவில்லை.

இந்ந நிலையில், சந்தேகத்தின்பேரில் இந்த வழக்கு தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் கடந்த ஒரு வார காலமாக எங்களை அடித்து துன்புறுத்தினா். சிறுமி மாயமானதற்கு நீங்கள்தான் காரணம் என்று ஒப்புக்கொள்ளுங்கள் என்று கூறி, உண்மைக்கு மாறாகக் கட்டாயப்படுத்துகின்றனா்.

எங்களுக்கும், சிறுமி மாயமானதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியும் சிபிசிஐடி போலீஸாா் துன்புறுத்தினா். நாங்கள் மனவேதனையில் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் உள்ளோம். எனவே, துன்புறுத்திய சிபிசிஐடி போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

தொடா்ந்து, அவா்கள் கூறும்போது, எங்கள் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட எஸ்.பி., இனி இதுபோன்று நடைபெறாது என தங்களிடம் தெரிவித்தாா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.