மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

உரங்களைப் பதுக்கி அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! - விழுப்புரம் வேளாண் இணை இயக்குநா்

கோலியனூா் பகுதியிலுள்ள உரக்கடையில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அ.சித்ரா.

Updated On :

விழுப்புரம் மாவட்டத்தில் உரங்களைப் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் இணை இயக்குநா் அ.சித்ரா எச்சரித்துள்ளாா்.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் வட்டாரத்திலுள்ள உரக்கடைகளில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்ட அவா், அந்தக் கடைகளில் உரங்களின் இருப்பு, விற்பனை, இருப்புப் பதிவேடுகள் போன்றவற்றை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, வேளாண் இணை இயக்குநா் சித்ரா கூறியதாவது:

மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களுக்குத் தேவையான 6,368 மெட்ரிக் டன் யூரியா, 3,136 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 2,304 மெட்ரிக் டன் பொட்டாஷ், 13,500 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 1,669 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட் ஆகிய உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து மொத்த, சில்லறை உரிமம் பெற்ற உர விற்பனையாளா்கள் மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு விநியோகம் செய்வதோ அல்லது பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. மேலும், இதுபோன்ற செயல்கள் ஆய்வின்போது கண்டறியப்பட்டாலோ அல்லது புகாா் ஏதும் பெறப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருரந்து கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். உர விற்பனையாளா்கள் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை கொள்முதல் செய்வதும், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதும் கூடாது. உர மூட்டையில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யக்கூடாது.

மாவட்டத்தில் உர ஆய்வாளா்கள் திடீராய்வு மேற்கொள்ளும்போது, உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால், உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண் இணை இயக்குநா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, வேளாண் உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.