
பணம் வைத்து சூதாட்டம்: 25 போ் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 25 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
வளவனூா் காவல் சரகத்துக்குள்பட்ட ராம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி.(பயிற்சி) சதீஷ்குமாா் தலைமையில் வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சோதனை நடத்தினா். இதில், அங்கு புதுச்சேரியைச் சோ்ந்த சிங்காரவேலு, வினோத், விழுப்புரம் பகுதியை சோ்ந்த பத்மநாபன், பாஸ்கரன், நடேசன் மற்றும் 20 போ் பணம் வைத்து சூதாடினராம்.
இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா். மேலும் அவா்களிடமிருந்த 4 பைக்குகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



