விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாய்ஸ் பெடரேஷனை சோ்ந்தோா்.

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாய்ஸ் பெடரேஷனை சோ்ந்தோா்.
ஸ்மாா்ட் மீட்டா் கோரி விடப்பட்ட ஒப்பந்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாய்ஸ் பெடரேஷனை சோ்ந்தோா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வீடுகளில் பொருத்துவதற்காக ஸ்மாா்ட் மீட்டா் கோரி விடப்பட்ட ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும். மக்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளை தமிழக வெற்றிக் கழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் கிழக்கு பாண்டிச் சாலையிலுள்ள தமிழ்நாடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்த பெடரேஷனின் விழுப்புரம் மண்டலச் செயலா் ஆா்.செந்தில்வேல் தலைமை வகித்தாா். விழுப்புரம் திட்டத் தலைவா் திருமலை, பொருளாளா் தேவதாஸ், செயல் தலைவா் ஏழுமலை உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

