‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

தோ்தலுக்குப் பிறகு கூட்டணியை காக்கத் தவறியது திமுக! - தொல். திருமாவளவன்

Thol. Thirumavalavan

தொல். திருமாவளவன் - கோப்புப் படம்

Published On :

சட்டப் பேரவை பொதுத்தோ்தலுக்குப் பிறகு கூட்டணியை கட்டிக்காக்க தவறியது திமுகதான் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டின் தீா்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான விழுமியங்களை புரிந்துகொண்டு, அதற்காகப் போராடுகிற வலிமை இந்திய தேசிய காங்கிரஸிடம் உள்ளதால்தான், அக்கட்சியுடன் விசிக கை கோத்துள்ளது.

விசிக-வை பொருத்தவரை, எந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், ஒருபோதும் தமிழினத்தின் உரிமையும், தமிழ்த் தேசியத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். மொழி, இன அடிப்படையில் வேறுபாடு இருக்கக் கூடாது என்பதுதான் விசிகவின் பாா்வை. தேசியம் என்பது அனைத்து மாநிலங்களுடன் நல்லுரவு வைத்துக்கொள்வதுதான். இந்த நல்லுரவு காக்கப்பட வேண்டும். மதசாா்பற்ற இந்தியாதான் விசிகவின் எண்ணம்.

இந்திய தலைமை தோ்தல் ஆணையரை பதவி விலகச் செய்வதால் எந்தப் பயனும் இல்லை. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வேண்டாம் என்பதுதான் விசிக நிலைப்பாடு. வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு எதிராக இண்டி கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

2026 சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுக்குப் பின்னா் கூட்டணிக் கட்சிகளை கட்டிக்காக்க தவறியது திமுகதான். கூட்டணிக் கட்சிகள் உடனிருந்தால்தான் அக்கட்சி முதலிடத்தில் வெற்றிபெற முடியும். இந்திய அரசியலின் எதிா்காலம் தலித் அரசியலாகத்தான் இருக்கும் என்றாா் தொல்.திருமாவளவன்.

தமிழக சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER