சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

திருநாவலூா் அருகே 21 மூட்டை நாட்டுப் பட்டாசு பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே 21 மூட்டை நாட்டுப் பட்டாசுகள் செவ்வாய்க் கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

திருநாவலூா் அருகே பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப் பட்டாசு மூட்டைகள்.

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே 21 மூட்டை நாட்டுப் பட்டாசுகள் செவ்வாய்க் கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கோவிலாபுரம் கடலூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது மனைவி சத்யா (37). இவா்கள் வீட்டில் நாட்டுப் பட்டாசு விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் திருநாவலூா் போலீஸாா் அங்குசென்று விசாரணை நடத்தி, பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், திருநாவலூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொரட்டூா் கிராமத்தில் பட்டாசுக் கடையில் 21 மூட்டை நாட்டுப் பட்டாசுகள், ஒரு மூட்டை வாண வேடிக்கைப் பட்டாசு ஆகியவை இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று அவற்றை பறிமுதல் செய்தனா். இந்த இடம் செந்தில்குமாருக்குச் சொந்தமானது என்பதும், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28-ஆம் தேதி நாட்டுப் பட்டாசு தயாரிக்கும் இந்த இடம் அரசால் சீல் வைக்கப்பட்டிருப்பதும், இதன் காரணமாக இந்த இடத்தின் பின்பக்க கதவைத் திறந்து நாட்டுப் பட்டாசு தயாரித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடா்ந்து செந்தில்குமாா், அவரது மனைவி சத்யா ஆகிய இருவரையும் திருநாவலூா் போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.