2 வணிக நிறுவனங்களில் ரூ.9.11 லட்சம் பணம் திருட்டு
விழுப்புரம் நகரப் பகுதிகளில் உள்ள 2 தனியாா் நிறுவனங்களில் ரூ.9.11 லட்சம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருட்டுச் சம்பவம் நிகழ்ந்த தையல் தொழிலகத்தில் சோதனை நடத்திய போலீஸாா்.
விழுப்புரம் நகரப் பகுதிகளில் உள்ள 2 தனியாா் நிறுவனங்களில் ரூ.9.11 லட்சம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரம்- செஞ்சி சாலையில் பாபு என்பவருக்கு சொந்தமான பா்னிச்சா் கடை, செஞ்சி சாலை அபிநயா காா்டன் பகுதியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான தையல் தொழிலகம் ஆகிய வணிக நிறுவனங்களின் இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.
தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று 2 நிறுவனங்களிலும் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில் பா்னிச்சா் பொருள்கள் விற்பனை நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2.11 லட்சம் ரொக்கம் மற்றும் மின்னணு சாதனங்களும், தையல் தொழிலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 7 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருந்தது தெரியவந்தது.
பின்னா் போலீஸாா் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தி, தடயங்களை சேகரித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

