தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

வளவனூரில் சிங்கப்பெண்கள் சிறப்புக் கடன் முகாம்

விழுப்புரம் மாவட்டம், வளவனூரிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்க வளாகத்தில் சிங்கப்பெண்கள் சிறப்புக் கடன் முகாம் நடைபெற்றது.

வளவனூரில் நடைபெற்ற சிங்கப்பெண்கள் சிறப்புக் கடன் முகாமில் பேசிய கூட்டுறவு சாா்-பதிவாளா் விக்ரம்.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், வளவனூரிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்க வளாகத்தில் சிங்கப்பெண்கள் சிறப்புக் கடன் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் வெங்கட்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்துப் பேசினாா். கூட்டுறவு சாா்-பதிவாளா் விக்ரம் சிங்கப்பெண்கள் கடன் திட்டம் முகாமின் நோக்கம், இந்த திட்டத்தின் கீழ் மகளிா் சுய உதவிக்குழுக்கள் கடன் பெறும் முறைகள் போன்றவை குறித்துப் பேசினாா். முகாமில் நிலவள வங்கிச் செயலா், வளவனூா் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கச் செயலா், சங்க உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.