சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

ஆயுதபூஜை: விழுப்புரம் கடை வீதிகளில் பொருள்களின் விற்பனை மும்முரம்

ஆயுதபூஜை பண்டிகைக்கு பொருள்களை வாங்க விழுப்பரம் மகாத்மா காந்தி சாலையில் ஞாயிற்றுக்கிழைமை திரண்ட மக்கள் கூட்டம்.

Updated On :

ஆயுதபூஜை பண்டிகை திங்கள்கிழமை (அக்.19) கொண்டாடப்படவுள்ள நிலையில், விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பூஜை பொருள்களை வாங்க பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மும்முரம் காட்டினா். மேலும், பொருள்களின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

தமிழகத்தில் ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகக் கருதப்படுவது நவராத்திரி வழிபாடாகும். புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 9 நாள்கள் இந்த வழிபாடு நடைபெறும். நிறைவு நாளில் ஆயுத பூஜை, சரசுவதி பூஜை திங்கள்கிழமையும் (அக்.19), விஜயதசமி செவ்வாய்க்கிழமையும் (அக்.20) கொண்டாடப்படவுள்ளன.

இதை முன்னிட்டு, விழுப்புரம் நகரத்திலும், மாவட்டத்திலும் பூஜைக்கான பொருள்களின் விற்பனை ஞாயிற்றுக்கிழமை மும்முரமாக நடைபெற்றது. பிற்பகல் வரை கூட்டம் குறைந்து காணப்பட்ட நிலையில், மாலைக்குப் பிறகு பொருள்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் நகரில் மகாத்மா காந்தி சாலை, காமராஜா் வீதி, பழைய பேருந்து நிலையம், ரயில் நிலைய சாலை, ஜவாஹா்லால் நேரு சாலை, பாகா்ஷா வீதி, வீரவாழியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் பழங்கள், பொரி, பூக்கள் போன்றவற்றின் விற்பனை நடைபெற்றது.

ஆயுதபூஜை கொண்டாட்டத்தில் முக்கியமாக வைக்கப்படும் பொரி, லிட்டா் ரூ.30 முதல் ரூ.40 வரையிலான விலைகளிலும், கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரையிலா விலையிலும் விற்பனையானது. மேலும், பொரியுடன், அவல், நிலக்கடலை உள்ளிட்டவை கொண்ட தொகுப்பு ரூ.60, ரூ.80, ரூ.100, ரூ.150 என்ற விலைகளில் கிலோவுக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்பட்டது.

வாழைப்பழம் சீப்பு தரத்துக்கேற்றவாறு ரூ.,60, 80, 100 என்ற விலைகளிலும், எலுமிச்சை பழம் 4 எண்ணிக்கை ரூ.40 முதல் 50 என்ற விலைகளிலும் அளவுக்கேற்றவாறு விற்பனையானது. மேலும், பல்வேறு பழங்கள் கொண்ட தொகுப்பு ரூ.150 முதல் ரூ.250 வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.

ஆப்பிள் பழம் கிலோ ரூ.120 முதல் ரூ.160 வரையிலான விலைகளில் ரகத்துக்கேற்றவாறும், மாதுளை கிலோ ரூ.160 முதல் ரூ.200, சாத்துக்குடி 2 கிலோ ரூ.120 முதல் ரூ.160 வரையிலான விலைகளிலும், ஆரஞ்சு கிலோ ரூ.200, திராட்சை கிலோ ரூ.100 என்ற விலைகளிலும் விற்பனையானது. இதைத் தவிர, தேங்காய் ரூ.30 முதல் ரூ.60 வரையிலானவிலைகளில் ரகங்களுக்கு ஏற்றவாறும் விற்பனையானது.

வீடுகள் மற்றும் அலுவலகங்கள், கடைகளில் திருஷ்டி கழிக்க பயன்படுத்தப்படும் பூசணிக்காய் கிலோ ரூ.40 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. இதுபோன்று, வாழைக்கன்று ஜோடி ரூ.30 முதல் ரூ.60 வரையிலான விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டன.

பூக்களின் விலை கடுமையாக உயா்வு: ஆயுத பூஜையையொட்டி, விழுப்புரத்திலுள்ள மொத்த விற்பனையகங்களில் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது. ஜாதிமல்லி கிலோ ரூ.1,100 முதல் ரூ.1,300 வரையிலும், முல்லை ரூ.900 முதல் ரூ.1000 வரையிலும், நல்ல சாமபந்தி ரூ.500 வரையிலும், கோழிக்கொண்டை ரூ.150 வரையிலும், ரோஜா ரூ.400 முதல் ரூ.450 வரையிலும், அரளி ரூ.500 வரையிலும், சிவப்பு கேந்தி ரூ.80 முதல்ரூ.150 வரையிலும், காக்கட்டான் ரூ.900 வரையிலும், சம்பங்கி ரூ.400 முதல் ரூ.500 வரையிலும், கனகாம்பரம் ரூ.900 வரையிலும் விற்பனையானது.

விழுப்புரம் மகாத்மா காந்தி சாலை, மேற்கு அய்யனாா்குளத் தெரு, பாகா்ஷா வீதி, திரு.வி.க.வீதி போன்ற இடங்களில் வண்ண அலங்காரத் தோரணங்கள் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. ரூ.50-ல் தொடங்கி ரூ.400 வரையிலான விலைகளில் இந்த அலங்கார தோரணங்கள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

விழுப்புரம் நகரம் போன்று, விக்கிரவாண்டி, திண்டிவனம், மயிலம், மரக்காணம், கண்ட மங்கலம், கோலியனூா், முகையூா், வளவனூா், கண்டாச்சிபுரம், காணை, திருவெண்ணெய்நல்லூா் போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கடைகளிலும் பொருள்களை வாங்க மக்கள் குவிந்தனா். விழுப்புரம் நகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

 விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த பூசணிக்காய்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த பூசணிக்காய்.

 விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையிலுள்ள விற்பனையகத்தில் அலங்கார தோரணங்களை வாங்குவோா்.

விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையிலுள்ள விற்பனையகத்தில் அலங்கார தோரணங்களை வாங்குவோா்.

விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையிலுள்ள விற்பனையகத்தில் பொரி வாங்கிய பொதுமக்கள்.

விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையிலுள்ள விற்பனையகத்தில் பொரி வாங்கிய பொதுமக்கள்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மொத்த பூக்கள் விற்பனையகத்தில் பூக்கள் வாங்கிய பெண்கள்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மொத்த பூக்கள் விற்பனையகத்தில் பூக்கள் வாங்கிய பெண்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.