இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

ஆயுதபூஜை! களைகட்டும் கோயம்பேடு சந்தை! பழம், பூக்கள் விலை உயர்வு

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பழம், பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தை

கோயம்பேடு சந்தை - கோப்புப்படம்

Updated On :

வீடு, கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்களில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், சென்னையில் அமைந்துள்ள கோயம்பேடு சந்தை பரபரப்பாகக் காணப்படுகிறது.

கோயம்பேடு சந்தைக்குள் சென்றாலே ஆங்காங்கே மக்களும் வியாபாரிகளும் வாழை மரக் கன்றுகள், தோரணங்கள், பழங்கள், பூக்களை வாங்கிக் கொண்டு சுமக்க முடியாமல் தங்களது வாகனங்களில் கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது.

பண்டிகைக் காலம் என்பதால், மக்கள் அதிகமான பழங்களை வாங்குவது வழக்கம். இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

வழக்கமாக ரூ.150 வரை விற்பனையாகும் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.300, நாக்பூர் ஆரஞ்ச் ரூ.60, நாட்டு ஆரஞ்ச் ரூ.250 வரை, கொய்யா ஒரு கிலோ ரூ.120, சப்போட்டா ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனையாகி வருகிறது.

தமிழகத்தின் மிக முக்கிய மலர்ச் சந்தைகளில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நெல்லை மலர் சந்தையில் மல்லிகை, பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.2000க்கும் சேலம் வஉசி மலர் சந்தையில் மல்லிகை கிலோ ரூ.1000க்கும், முல்லை ஒரு கிலோ ரூ.700க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மலர் சந்தையில் மல்லிகை ஒரு கிலோ ரூ.1700க்கு விற்பனையாகி வருகிறது.

இதன் தாக்கம் சென்னை கோயம்பேடு மலர் சந்தையிலும் எதிரொலித்து பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.