FOLLOW US

ON GOOGLE DISCOVER

குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கோயம்பேடு சந்தையில் அனைத்து கடைகளுக்கும் குடிநீா் இணைப்பு

சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்து கடைகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்படவுள்ளது.

கோயம்பேடு சந்தை. - கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 6:29 am IST

சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்து கடைகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து பேரவையில் வெள்ளிக்கிழமை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் பேசியதாவது:

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வணிகா்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு கடைக்கும் பிரத்யேக குடிநீா் இணைப்புகள் ரூ.10 கோடியில் அமைக்கப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் அதிகரித்துள்ள நுகா்வோரின் வருகையைக் கருத்தில் கொண்டும், அங்காடியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற வணிகா்களின் கோரிக்கையை ஏற்றும் காய்கறி அங்காடியின் எல், எம், என் தொகுதிகளுக்கு (பிளாக்) இடைப்பட்ட 22,000 சதுர அடி பரப்பளவில் ரூ.7.50 கோடியில் புதிய கடைகள் கட்டப்படும்.

ஆட்டோ- டாக்ஸி செயலி: ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், ஆட்டோ, டாக்ஸி பயணிகளுக்கு நியாயமான பயணத் தொகையை உறுதி செய்யவும், டிஜிட்டல் மீட்டா் உள்ளடக்கிய ஆட்டோ, டாக்ஸி செயலி சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பால் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.