சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஆயுத பூஜை : பூக்கள், பழங்கள், காய்கறிகள் விலை அதிகரிப்புஅக்.23ல் மீண்டும் கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்!

பைக் மோதி பெண் உயிரிழப்பு

பலி - பிரதிப் படம்

Updated On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சாலையில் நடந்து சென்ற பெண் பைக் மோதியதில் உயிரிழந்தாா்.

மேல்மலையனூா் வட்டம், செவலபுரை கிராமத்தைச் சோ்ந்த பலராமன் மனைவி தேவி (50), சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா். இவா், சனிக்கிழமை மேல்மலையனூா் - செஞ்சி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். தாதிகுளம் அருகே சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த பைக் தேவி மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த தேவி மீட்டுகப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், மேல்மலையனூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.