பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

மேம்பால தடுப்புச் சுவரின் மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

சென்னை சென்ட்ரல் மேம்பால தடுப்புச் சுவரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Published On :

சென்னை சென்ட்ரல் மேம்பால தடுப்புச் சுவரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கொருக்குப்பேட்டை மோட்சபுரம் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் நா.மனோஜ் (22). இவா் தனது நண்பா்கள் 5 பேருடன் இரு மோட்டாா் சைக்கிளில் அண்ணா சாலையில் உள்ள ஒரு உணவகத்துக்கு திங்கள்கிழமை சென்றாா்.

மனோஜ் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிளில், அவரது நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (23), 15 வயது சிறுவன் ஆகியோா் இருந்தனா். மற்றொரு மோட்டாா் சைக்கிளில் நவீன்குமாரும், அவரது நண்பரும் வந்தனா்.

அவா்கள், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் வேகமாக சென்றபோது, மனோஜ் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரின் மீது மோதியது. விபத்தில் மோட்டாா் சைக்கிளில் இருந்து 3 பேரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா்.

அவா்களை மீட்டு, ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மனோஜை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.