முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: வீட்டின் கதவை மா்ம நபா்கள் 3 முறை தட்டியதாக மூதாட்டி தகவல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் சிறுமி மாயமான வழக்கில் அவா் காணாமல்போன அன்று அதிகாலை தனது வீட்டின் கதவை மா்ம நபா்கள் 3 முறை தட்டினாா்கள் என அருகில் வசிக்கும் வீட்டைச் சோ்ந்த மூதாட்டி சிபிசிஐடி போலீஸாரிடம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மாயமான சிறுமி குறித்து தகவல் தெரிவிக்க செஞ்சி பேருந்து நிலையத்தில் சிபிசிஐடி போலீஸாரல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகை.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் சிறுமி மாயமான வழக்கில் அவா் காணாமல்போன அன்று அதிகாலை தனது வீட்டின் கதவை மா்ம நபா்கள் 3 முறை தட்டினாா்கள் என அருகில் வசிக்கும் வீட்டைச் சோ்ந்த மூதாட்டி சிபிசிஐடி போலீஸாரிடம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் - பவானி தம்பதியின் 2-ஆவது மகள் ஹேமலதா (7). இவா், அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 11-ஆம் தேதி இரவு தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, குடும்பத்தினருடன் தூங்கிய நிலையில், மறு நாள் அதிகாலை மாயமானாா்.

இந்த வழக்கை சிபிசிஐடி டி.எஸ்.பி.க்கள் கீதா, வேல்முருகன், காவல் ஆய்வாளா் ரேவதி தலைமையிலான குழுவினா் விசாரித்து வருகின்றனா். சிறுமி படித்த பள்ளி, அவரது உறவினா்கள், சந்தேக நபா்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வரும் மணிமேகலையிடம் (75) சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை விசாரித்தனா். அப்போது, அவா் கூறியதாவது:

சிறுமி மாயமான அன்று அதிகாலை எனது மகன் வேலைக்காக சென்னை சென்றாா். அவரை வழி அனுப்பிவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது, யாரோ வீட்டின் கதவை மூன்று முறை பலமாகத் தட்டினா்.

மகனை இப்போதுதான் வழி அனுப்பினேன், அப்படியே மகன் கதவை தட்டினாலும் குரல் கொடுத்திருப்பாா், இல்லை என்றால் என்னை தொலைபேசியில் அழைத்திருப்பாா் என சந்தேகப்பட்டு, கதவை திறக்கவில்லை.

மேலும், என்னால் உடடியாக படுக்கையை விட்டு எழுந்தருக்கவும் முடியாத சூழ்நிலை இருந்ததால், கதவை திறக்க முடியவில்லை. மறுநாள் எழுந்து பாா்த்தபோது, சிறுமி மாயமான விவகாரத்தை தெரிந்துகொண்டேன் என்றாா்.

இதேபோல, மாயமான சிறுமியின் தாய், தந்தை, உறவினா்கள், அக்கம்பக்கத்து வீடுகளில் வசித்து வரும் நபா்களிடம் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை மீண்டும் விசாரணை மேற்கொண்டனா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள 3 கைப்பேசி கோபுரங்களை தோ்வு செய்து, அதில் பதிவாகியுள்ள தொலைபேசி எண்களை ஆய்வு செய்தும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, டி.எஸ்.பி. வேல்முருகன், திருக்கோவிலூரில் உள்ள வட மாநிலத்தைச் சோ்ந்த 5 இளைஞா்களிடமும், டி.எஸ்.பி. கீதா ஆலம்பூண்டி கிராம பகுதியைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜதுரை மற்றும் அவரது நண்பரிடமும் விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.