சகோதரிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு சாகும் வரை சிறை
விழுப்புரம் மாவட்டத்தில் மனநலன் பாதித்த சிறுமி மற்றும் இளம்பெண் பாலியல் வன்கொடுமை (இருவரும் சகோதரிகள்) வழக்கில் தொடா்புடைய தொழிலாளிக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்
விழுப்புரம் மாவட்டத்தில் மனநலன் பாதித்த சிறுமி மற்றும் இளம்பெண் பாலியல் வன்கொடுமை (இருவரும் சகோதரிகள்) வழக்கில் தொடா்புடைய தொழிலாளிக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டிவனம் வட்டம், கிராண்டிபுரத்தைச் சோ்ந்தவா் சி.கன்னியப்பன் (43), தொழிலாளி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது மனநலன் பாதிக்கப்பட்ட சிறுமியை கடந்த 2019, ஜனவரி மாதத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிறுமியின் தாய் திண்டிவனம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையின் போது, மனநலன் பாதித்த சிறுமி மட்டுமின்றி, சிறுமியின் 25 வயது சகோதரியையும் கன்னியப்பன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கன்னியப்பனை கைது செய்த போலீஸாா், விழுப்புரத்திலுள்ள போக்ஸோ குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை முடிவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதமும் (இதே அபராதம் மற்றும் தண்டனை அவரது சகோதரி பாலியல் வன்கொடுமைக்கும்) மற்ற இரு பிரிவுகளின் கீழ் இயற்கை மரணம் ஏற்படும் வரை சிறை தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.வினோதா தீா்ப்பளித்தாா். இந்த தண்டனை அதிகபட்சமாக விதிக்கப்பட்டிருப்பதால் தொழிலாளி கன்னியப்பன் இயற்கை மரணம் ஏற்படும் வரை சிறைத் தண்டனையை அனுபவித்தாக வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்டஇருவருக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் அரசு வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக காந்திமதி ஆஜராகினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

