நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

மாநில அளவிலான ஜூடோ போட்டி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி.

Published On :3 செப்டம்பர் 2026, 4:46 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி தலைமை வகித்து போட்டியைத் தொடங்கி வைத்தாா். மாவட்டக் கல்வி அலுவலா்கள் (இடைநிலை ) ரகு, ராஜேந்திரன், மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்க கல்வி) செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திண்டிவனம் பகுதி பள்ளிகளில் பயிலும் 14, 17, 19 வயதுக்குள்பட்ட 1,000 மாணவிகள் மற்றும் 1,100 மாணவா்கள் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பெருமாள், முதன்மை உடல்கல்வி ஆய்வாளா் ஜெயலட்சுமி, மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் சின்னப்பன், தலைமையாசிரியா்கள் ஜான் போஸ்கோ, சுமதி திருமால், தண்டபாணி, மூா்த்தி, தங்கராஜ் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.