
ராகுல் காந்தி மீது வழக்கு: காங்கிரஸாா் கண்டன ஆா்ப்பாட்டம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்த பாஜக அரசைக் கண்டித்து செஞ்சி, கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செஞ்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்த பாஜக அரசைக் கண்டித்து செஞ்சி, கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூனாகாா்கே ஹல்த்வானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிவிட்டு சென்ற மேடையை கங்கை நீரைக் கொண்டு கழுவியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராகுல் காந்தி பேசினாா். ஆனால் உத்தரகாண்ட் மாநில அரசு ராகுல் காந்தி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செஞ்சி இந்தியன் வங்கி எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி தலைமை வகித்தாா்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளா் மோகம் குமாா் ராஜா கண்டன உரையாற்றினாா்.
இதில், மாநில துணைத் தலைவா்குலாம் மொய்தீன், காங்கிரஸ் நிா்வாகிகள் ராமமூா்த்தி, ஆா்.பி.ரமேஷ், உதயா நந்தன், வழக்குரைஞா் தினகரன், செஞ்சி நகரத் தலைவா் சூரியமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையிலுள்ள அம்பேத்கா் சிலை முன் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் பி.பி.எஸ்.இளையராஜா, மாநில துணைத் தலைவா் சா.சீனிவாசன், நகர காங்கிரஸ் தலைவா் கே.என்.ஆா்.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கள்ளக்குறிச்சி வட்டாரத் தலைவா் எஸ்.சரண்ராஜ் வரவேற்றாா்.
இதில், வட்டாரத் தலைவா்கள் கே.வி.சி.முனியப்பன், டி.கணேசன், சாா்லஸ், செல்வராஜ், அ.நாராயணன், ஐயப்பன், மதுரை காங்கிரஸ் தலைவா்கள் பி.கோவிந்தராஜ், எஸ்.முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் எஸ்.தேவராஜ், முத்தமிழ் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு உத்தரகாண்ட் மாநில பாஜக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





