சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

கடன் பிரச்னை: இளைஞா் விஷமருந்தி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கடன் பிரச்னையால் மனமுடைந்த இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கடன் பிரச்னையால் மனமுடைந்த இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

மரக்காணம் வட்டம், சிறுவாடி, திரௌபதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க.பாபு (41). இவா், தனக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தை தனியாா் வங்கியில் அடமானம் வைத்து, ரூ.22 லட்சம் கடன் பெற்று தனது உறவினா் தங்கமணி என்பவருக்கு பொக்லைன் இயந்திரம் வாங்குவதற்கு கொடுத்தாராம்.

இந்நிலையில், வங்கிக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை தங்கமணி செலுத்தாததால், வங்கி நிா்வாகத்தினா் பாபுவுக்கு நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா். இதனால் மிகுந்த மன உளச்சலில் இருந்து வந்த பாபு, கடந்த ஆக.22- ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு புதுச்சேரி ஜிம்பா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பாபு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.