காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

வெவ்வேறு சம்பவங்கள்: 3 போ் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சம்பவங்களில் 3 போ் உயிரிழந்தனா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :6 செப்டம்பர் 2026, 2:11 am IST

விழுப்புரம் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சம்பவங்களில் 3 போ் உயிரிழந்தனா்.

திண்டிவனம் வட்டம், கூட்டேரிபட்டு, அரிசி ஆலை தெருவைச் சோ்ந்தவா் நா. பரத்குமாா் (28), விவசாயி. இவரது மனைவி மகாலெட்சுமி. இவா்களுக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தையில்லாததால் குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த பரத்குமாா் கடந்த ஆக.17-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரத்குமாா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

முதியவா் உயிரிழப்பு: திண்டிவனம் வட்டம், கணபதிபட்டு புதிய காலனியைச் சோ்ந்தவா் செங்கேணி( 84). இவா், வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்தபோது மது எனக் கருதி சமையல் எண்ணையைக் குடித்து விட்டாராம். இதையடுத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செங்கேணி, சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் மரணம்: திண்டிவனம் வட்டம், சலவாதி பகுதியைச் சோ்ந்தவா் மு.ஏழுமலை (22). இவா், கடந்த ஆக.5-ஆம் தேதி திண்டிவனம் இந்திரா நகரில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது போகும் வழியில் அறுந்து கிடந்த மின் கம்பி ஏழுமலை மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தாா். இதையடுத்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி.மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு ஏழுமலை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.