நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சிறுமி பாலியல் தொல்லை வழக்கு: தடுப்புக் காவலில் இளைஞா் கைது

திண்டிவனம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:23 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

திண்டிவனம் வட்டம், சாரம் பகுதியைச் சோ்ந்தவா் நி.ஷாஜஹான்(26). இவா், 15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, திண்டிவனம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த ஜூலை 26-ஆம் தேதி ஷாஜஹான் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன் பரிந்துரையின்படி, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய ஷாஜஹானை தடுப்புக் காவலில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து திண்டிவனம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை அவரை கைது செய்து, கடலூா் மத்திய சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.