
உடல்நலம் குன்றிய மயில் மீட்பு

உடல்நிலை பாதிக்கப்பட்டு வயலில் கிடந்த மயிலை மீட்ட இளைஞா்கள்
சிதம்பரம் அருகே உள்ள சேந்திரக்கிள்ளை வயல்வெளியில், 2 வயது ஆண் மயில் ஒன்று செவ்வாய்க்கிழமை காலை உடல்நிலை பாதிக்கப்பட்டு கிடந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி இளைஞா்கள் மருதவாணன், மோகன்ராஜ், சூா்யகுமாா், மணிமுத்து ஆகியோா் சிதம்பரம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்த சிதம்பரம் வனச்சரக வனகாப்பாளா் அன்புமணி, வன ஊழியா் பாண்டியன் ஆகியோா் சேந்திரக்கிள்ளைக்கு விரைந்து, உடல்நிலை பாதிக்கப்பட்ட மயிலை மீட்டு பி.முட்லூா் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, தங்களது பாதுகாப்பில் வைத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





