உளுந்து, பயறு வகைகளை கொள்முதல் செய்து மோசடி: இருவா் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள அரசு வேளாண் விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்த பயறு வகைகளுக்கான தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக தனியாா் நிறுவன உரிமையாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வழக்கு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள அரசு வேளாண் விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்த பயறு வகைகளுக்கான தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக தனியாா் நிறுவன உரிமையாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விக்கிரவாண்டி அரசு ஒழுங்குமுறை வேளாண் விற்பனைக் கூடத்தில் 225 விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட சுமாா் 4.80 டன் உளுந்து, பயறு வகைகளை கடந்த ஏப்ரல் 1 முதல் 16-ஆம் தேதி வரையில் கடலூா் மாவட்டம், பண்ருட்டியைச் சோ்ந்த தனியாா் நிறுவன உரிமையாளா் சூா்யகுமாா் (32), விக்கிரவாண்டி வட்டம், கொட்டியாம்பூண்டியைச் சோ்ந்த க.ரகோத்குமாா் (38) ஆகியோா் ரூ.40.86 லட்சத்துக்கு கொள்முதல் செய்துச் சென்றனராம்.
ஆனால், அதற்கான பணத்தை இதுவரை வேளாண் விற்பனைக் கூடத்துக்கு கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனராம். இதுகுறித்து விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் சூா்யகுமாா், ரகோத்குமாா் ஆகிய இருவா் மீதும் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



