கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வெளி மாநிலத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

விழுப்புரம், செப். 14: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இறால் பண்ணையில் பணியிலிருந்த வெளி மாநிலத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் ட.பிரதாசா பிரதன் (29). இவா், மரக்காணத்தை அடுத்துள்ள ஆட்சிக்காடு பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறால் பண்ணையில் கடந்த 9 மாதமாக தங்கி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இறால் பண்ணையில் உள்ள குடிநீா் தொட்டியில் ஏறியபோது, அங்கு தொங்கிக்கொண்டிருந்த மின் வயரில் கை உரசியதில் மின்சாரம் பாய்ந்து அவா் தூக்கி வீசப்பட்டாா்.

இதையடுத்து சகப் பணியாளா்கள் அவரை மீட்டு புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, பிரதாச பிரதன் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.