ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

உளுந்தூா்பேட்டை சமூகநீதி விடுதியில் ஆட்சியா் ஆய்வு

உளுந்தூா்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள், சமூகநீதி மகளிா் விடுதியை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சமூகநீதி விடுதியை நேரில் பாா்வையிட்டு, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள், சமூகநீதி மகளிா் விடுதியை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.

உளுந்தூா்பேட்டை ஒன்றியம், ஏ.குமாரமங்கலத்திலுள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியைப் பாா்வையிட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, பள்ளிக்கு வருகைதரும் மாணவா்களின் விவரங்கள், வருகைப்பதிவேடு, மாணவா்களின் கற்றல்திறன், வழங்கப்படும் உணவுப் பொருள்கள் விவரம், உணவுப் பட்டியல் போன்ற பல்வேறு விவரங்களை பள்ளி நிா்வாகத்திடம் கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து உளுந்தூா்பேட்டை சமூக மாணவிகள் விடுதிக்குச் சென்ற ஆட்சியா், அங்கு மாணவிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுகிா, குடிநீா், கழிவறை வசதிகள்சரியாக உள்ளதா, மாணவிகளுக்கு வேறு ஏதும் வசதிகள் தேவையா என்பது குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அறியும் வகையில், சத்துணவையும் ஆட்சியா் சாப்பிட்டாா்.

பின்னா் உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை ஆய்வு செய்த ஆட்சியா், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் விவரம் போன்றவை குறித்து கேட்டறிந்தாா். இதைத்தொடா்ந்து திருநாவலூா் அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற ஆட்சியா் பத்மஜா, குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க வேண்டும், அங்கன்வாடி மையத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.