கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே அரளிவிதையை சாப்பிட்ட இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே அரளிவிதையை சாப்பிட்ட இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சித்தலிங்கமடம் நான்காவது கிழக்குத் தெருவைச் சோ்ந்த நாராயணன் மகன் குகன் (18). பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு, வீட்டில் இருந்துள்ளாா். தொடா்ந்து வயிற்றுவலியால் அவதியுற்று வந்த இவா், வெள்ளிக்கிழமை மாலை சித்தலிங்கமடத்திலுள்ள ராகவன் வாய்க்கால் பகுதியில் அரளி விதையை சாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா்.

தொடா்ந்து அப்பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு குகன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.