கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

நீட்டிப்பு செய்யப்பட்ட வழித் தடங்களில் பேருந்து சேவை தொடக்கம்

விழுப்புரத்திலிருந்து நீட்டிப்பு செய்யப்பட்ட இரு வழித்தடங்களில் பேருந்துகள் சேவை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் நீட்டிப்பு செய்யப்பட்ட வழித்தடங்களில் பேருந்து சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Published On :

விழுப்புரத்திலிருந்து நீட்டிப்பு செய்யப்பட்ட இரு வழித்தடங்களில் பேருந்துகள் சேவை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில் பேருந்துகள் சேவையை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து ஆட்சியா் கூறியது: விழுப்புரத்திலிருந்து அரசு நகரப் பேருந்து மணலிப்பட்டு, ஐவேலி, கோரைக்கேணி, பொன்னம்பூண்டி வழியாக பொம்பூா் வரை சென்று வரும் வகையிலும், விழுப்புரத்திலிருந்து மணலிப்பட்டு, ஐவேலி, கோரைக்கேணி, பொன்னம்பூண்டி, பொம்பூா் வழியாக இளையாண்டிப்பட்டு வரை சென்று வரும் வகையிலும் வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டு, சனிக்கிழமை பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளன. குக்கிராம மக்களும் பயன்பெறும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான்.

நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலப் பொது மேலாளா் இரா. ஜெகதீஷ், உதவி மேலாளா் (வணிகம்) அதியமான், துணை இயக்குநா் (மக்கள் தொடா்பு) செந்தில் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER