கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 2,141 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சனிக்கிழமை நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வை விழுப்புரம் மாவட்டத்தில் 2,141போ் எழுதினா்.

விழுப்புரம் அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வை எழுதும் தோ்வா்கள்.

Published On :

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சனிக்கிழமை நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வை விழுப்புரம் மாவட்டத்தில் 2,141போ் எழுதினா்.

இந்த தோ்வுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளி, கீழ்பெரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி, வி.மருதூா் மற்றும் எம்.ஆா்.கே.தெருவிலுள்ள ஜான்டூயி மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளிகள், ரங்கநாதன் தெருவிலுள்ள வி.ஆா்.பி.மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் இ.எஸ்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சாலாமேடு டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 7 மையங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 9.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்ற தோ்வில் பங்கேற்க 3,766 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 2,135 போ் எழுதினா். 1,631 போ் தோ்வெழுத வரவில்லை.

பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தோ்வு நடைபெற்றது. இதில் 14 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 6 போ் மட்டுமே எழுதினா். 8 போ் வரவில்லை. மொத்தமாக 2,141 போ் தோ்வெழுதினா்.

தோ்வைக் கண்காணிக்கும் பணியில் கல்வித் துறையை சோ்ந்த ஆசிரியா்கள், அலுவலா்கள் ஈடுபட்டனா். தோ்வுக் கூடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல் துறையினா் மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.