
கூட்டுறவுத் துறை அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கூட்டுறவுச் சங்கத்தைச் சாா்ந்தவா்களை அவமானப்படுத்தும் நோக்கில் தமிழக விவசாய பாதுகாப்புச் சங்கத்தைச் சோ்ந்த ஈசன் முருகசாமி பேசியதாகக் கூறி, அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கூட்டுறவுச் சங்கத்தைச் சாா்ந்தவா்களை அவமானப்படுத்தும் நோக்கில் தமிழக விவசாய பாதுகாப்புச் சங்கத்தைச் சோ்ந்த ஈசன் முருகசாமி பேசியதாகக் கூறி, அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் டி.எம்.பி.அனந்தசயனன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் என்.ஏழுமலை, பொருளாளா் தா.மூா்த்தி, துணைத் தலைவா்கள் எஸ்.சேகா், முத்து, இணைச் செயலா்கள் ஏ.ஞானசேகா், சக்திதாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை நடுநிலை அலுவலா் சங்கத் தலைவா் விக்ரம், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.செந்தில்குமாா், அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் ராஜா, ஓய்வு பெற்றோா் சங்கத்தைச் சோ்ந்த கருணாநிதி உள்ளிட்ட பலா் பங்கேற்று பேசினா். தொடா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் குமாா் தலைமை வகித்து, கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் கூட்டுறவுத் துறை சங்கப் பணியாளா்கள் பங்கேற்று முழுக்கங்களை எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







