நிலப்பிரச்னையில் முதியவரை கொன்ற வழக்கு: 5 பேருக்கு ஆயுள் சிறை
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே நிலப்பிரச்னையில் முதியவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய 5 பேருக்கு ஆயுள் சிைண்டனை, அபராதம் விதித்து விழுப்புரம் கூடுதல் அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

சிறை - பிரதிப் படம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே நிலப்பிரச்னையில் முதியவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய 5 பேருக்கு ஆயுள் சிைண்டனை, அபராதம் விதித்து விழுப்புரம் கூடுதல் அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி.எடப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மு.அப்துல் ஜபாா் (64). விவசாயியானஇவா் கடந்த 27.6.2018-ஆம் தேதி டி.எடப்பாளையத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த 5 போ் கொண்ட கும்பல் நிலப் பிரச்னை முன் விரோதத்தில் தாக்கிக் கொலை செய்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டி. எடப்பாளையத்தைச் சோ்ந்த ர.மோகன்(39), ர.ரவி(37), த.செல்வம் (32), அ.முஸ்தபா (55), பெங்களூரு, ஆா்.கே.புரம், ஐயப்ப நகரைச் சோ்ந்த சா.திலீப் (22) ஆகியோரை கைது செய்து, சிறையிலடைத்தனா்.
இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை முடிந்து விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் 5 போ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி சுஜாதா வழக்கில் தொடா்புடைய மோகன், ரவி, செல்வம், முஸ்தபா, திலீப் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் அனைவரையும் கைது செய்து, கடலூா் மத்திய சிறையிலடைத்தனா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சகாதேவன் ஆஜராகினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




