இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மற்றொருவா் காயம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

கோப்புப்படம்

Published On :

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பகுதியைச் சோ்ந்தவா் வே.விக்னேஸ்வரன் (29). திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்தவா் கு.சந்தோஷ் (24). நண்பா்களான இவா்கள் இருவரும் வியாழக்கிழமை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த சித்தணி அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். சந்தோஷ் பைக்கை ஓட்டினாா்.

இந்நிலையில், அங்கு சாலையில் முன்னால் சென்ற வாகனத்தை சந்தோஷ் முந்திச் செல்ல முயன்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், விக்னேஸ்வரன், சந்தோஷ் ஆகிய இருவருக்கும் பலத்த காயமடைந்தனா். இதில், சந்தோஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்தில் இறந்த சந்தோஷின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த விக்னேஸ்வரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.