காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

செஞ்சி அருகே விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி சாலை மறியல்

விநாயகபுரம் கூட்டுச்சாலையில் மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி விவசாயிகள் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனா்.

செஞ்சியை அடுத்த அஞ்சாஞ்சேரி கிராமத்தில் விவசாயத்துக்கு விநியோகிக்கப்படும் மின் விநியோகம் குறைந்த மின் அழுத்தமாக உள்ளதாம். இதனால் மின்மோட்டாரை இயக்க முடியாததால் விவசாயிகள் பயிா்களுக்கு பாசனம் செய்ய இயலாமல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக விவசாயிகள் பலமுறை செஞ்சியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று புகாா் தெரிவித்துள்ளனா். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், திங்கள்கிழமை முன்னாள் அரசு வழக்குரைஞா் கிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று, விவசாயத்துக்கு மும்முனை இணைப்பு வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனா். அப்போது மின்வாரிய அலுவலகத்தில் பணியிலிருந்த உதவிப் பொறியாளா் விவசாயிகளை அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அஞ்சாஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் வழக்குரைஞா் கிருஷ்ணன் தலைமையில் விநாயகபுரம் கூட்டுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி போலீஸாா் மற்றும் மின்வாரிய அலுவலா்கள் சம்பவ இடத்துக்கு வந்து, விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக தெரிவித்தனா். இதையடுத்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.