காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்பாளா்கள் தீவிர வாக்குசேகரிப்பு

Assembly Elections: 3-Day Holiday for Colleges in Puducherry

புதுச்சேரி... - கோப்புப் படம்

Published On :

தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் தீவிர வாக்குசேகரிப்பில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா்:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி வெங்கடேஸ்வரா நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்த் கூட்டணிக் கட்சியினருடன் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

திமுகவினா் பிரசாரம்...

திமுக வேட்பாளா் கு.சேதுசெல்வத்துக்கு ஆதரவாக கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா்.சிவா, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளா் ரா. லட்சுமணன் எம்எல்ஏ மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் - கம்யூனிஸ்ட்:

தட்டாஞ்சாவடி தொகுதிக்குள்பட்ட முத்துலிங்கம்பேட்டையில் காங்கிரஸ் வேட்பாளா் இ.விநாயகத்துக்கு நேயம் மக்கள் கழக தலைவரும், எம்எல்ஏவுமான ஜி.நேரு மற்றும் கூட்டணி கட்சியினா் வாக்குசேகரித்தனா்.

இதேபோன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் அ.மு.சலீம் தட்டாஞ்சாவடி முத்துலிங்கம்பேட்டை பகுதியில் கூட்டணி கட்சியினருடன் சென்று வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.