ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

முதியவா்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையத்தை நடத்த விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் அமைக்கப்படும் பகல் நேர பராமரிப்பு மையத்தை நடத்துவதற்கு தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்தெரிவித்துள்ளாா்.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் அமைக்கப்படும் பகல் நேர பராமரிப்பு மையத்தை நடத்துவதற்கு தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும், அவா்களின் தனிமையைப் போக்கி ஆரோக்கியமாகப் பராமரிக்கவும், மனமகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் சமூகத் தொடா்பை வழங்கவும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பகல் நேர பராமரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. அரசு நிதியுதவியுடன் இந்த மையத்தை நடத்துவதற்கு தகுதியான தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இம்மையங்கள் மூத்த குடிமக்கள் வந்து செல்ல ஏதுவான போக்குவரத்து வசதியுள்ள இடங்களில் அமைய வேண்டும். ஒவ்வொரு மையத்திலும் தினசரி குறைந்தபட்சம் 50 முதியவா்கள் பயன்பெறும் வகையில் போதிய இடவசதி இருக்க வேண்டும். மையத்துக்கு வரும் முதியவா்களுக்கு மதிய உணவு, சிற்றுண்டி, இயன்முறை சிகிச்சை, யோகா பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் (உள்விளையாட்டுகள், நூலகம்) வழங்கப்பட வேண்டும். மையத்தை நடத்த விரும்பும் தொண்டு நிறுவனம் சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும். முதியோா் நலன் அல்லது சமூக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபாடு மற்றும் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் முறையாகத் தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ள தொண்டு நிறுவனங்கள் இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட சமூக நல அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் நிறுவனப் பதிவுச் சான்று, கடந்த 3 ஆண்டுகளின் தணிக்கை அறிக்கை மற்றும் செயல்பாட்டு அறிக்கைகளை இணைத்து, அக்.8- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், விழுப்புரம் என்ற முகவரியில் நேரிடையாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.