ஓட்டு காங்கிரஸூக்கு; வெற்றி பாஜகவுக்கு

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால் திருவிழா போல நடந்து வந்த தேர்தல்கள் இப்போது உற்சாகம் இழந்து விட்டதே?
ஓட்டு காங்கிரஸூக்கு; வெற்றி பாஜகவுக்கு

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால் திருவிழா போல நடந்து வந்த தேர்தல்கள் இப்போது உற்சாகம் இழந்து விட்டதே?

நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. என்னதான் கெடுபிடிகள் இருந்தாலும் பிரியாணி கொடுப்பது, மதுபானம் கொடுப்பது குறையவில்லையே.

வழக்குரைஞர் உதவி தேவைப்படும் அளவுக்கு வேட்புமனு தாக்கல் செய்வது கடினமாக இருப்பதாக பல வேட்பாளர்கள் புகார் தெரிவிக்கின்றனரே?

அதற்குதான் படித்தவர்கள் தேர்தலில் நிற்க வேண்டும் என்கிறார்கள். வேட்புமனுவை வேட்பாளருக்காக மற்றவர்கள் தயார் செய்யலாம் என்கிறபோது இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை. வேட்பாளர்களின் விவரங்கள் வாக்காளர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக அதிகமான கேள்விகள் இடம்பெற்றுள்ளன. எனவே, இது வரவேற்க வேண்டிய விஷயமே.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. முதன்மை போட்டியாளர்கள் யார் என நினைக்கிறீர்கள்?

இந்தத் தேர்தலில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. அதிமுக, திமுகவுக்கு பாஜக கூட்டணி மிகப்பெரிய சவாலாக இருக்கும். வெற்றிவாய்ப்பும் பாஜக கூட்டணிக்கே அதிகம் என நினைக்கிறேன்.

நீங்கள் பாரம்பரியமான காங்கிரஸ்காரர். மூத்த வழக்குரைஞர். ஆனாலும் இதுவரை தேர்தலில் போட்டியிடவில்லையே?

1980-இல் காங்கிரஸ் - திமுக கூட்டணி இருந்தபோது தென் சென்னை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டேன். ஆனால், கடைசிநேரத்தில் மாற்றிவிட்டார்கள். அதற்கான காரணத்துக்குள் இப்போது போக விரும்பவில்லை. இந்தத் தேர்தலில் தென் சென்னையில் போட்டியிடுமாறு காங்கிரஸ் சார்பில் அழைத்தார்கள் நான் மறுத்துவிட்டேன்.

காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை மூத்த காங்கிரஸ் உறுப்பினரான நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ஒரு வகையில் தனித்துப் போட்டியிடுவது நல்லது தான். காங்கிரஸின் பலம் என்ன என்பது தெரிந்துவிடும். காங்கிரஸூக்கு என்று ஒரு வாக்குவங்கி உள்ளதால் கணிசமான வாக்குகள் கிடைக்கும்.

பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்கிறீர்கள். நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்?

நான் காங்கிரஸ்காரன். எப்போதும் காங்கிரஸூக்குதான் வாக்களிப்பேன்.

நீங்கள் காங்கிரஸ்காரராக இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்கிறீர்களே?

எனக்கு யாரும் விரோதிகள் இல்லை. எனக்கு நல்லது என தோன்றுகிற எந்த நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்பேன்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று அண்ணா சொன்னார். ஆனால், அவரைப் பின்பற்றுவதாகக் கூறுபவர்கள் மற்ற கட்சிக்காரர்களை நேரில் பார்த்து பேசக் கூட பயப்படுகிறார்கள். இந்நிலை மாற வேண்டும் என்று நினைப்பவன் நான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com