திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி புதன்கிழமை மாலை சுமார் 6.30 மணிக்கு கருணாநிதியின் கோபாலபுர இல்லத்தில் தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்தது திமுக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக தலைவர் மு. கருணாநிதி தலைமையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடந்து கொண்டிருந்தபோது கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்ட மு.க. அழகிரி கோபாலபுரம் இல்லத்தில் அவரது தாயாரை சந்தித்து தனக்கு இழைக்கப்படும் அநீதிகளை அவரிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது.
அழகிரி, வீட்டிற்கே வந்து தயாளு அம்மாளை சந்திப்பார் என்பதை மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் யாரும் எதிர்பார்க்கவில்லை. ÷ஆரணியில் தனது ஆதரவாளர் முருகன் என்பவரின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மு.க. அழகிரி புதன்கிழமை காலை, விமானத்தில் சென்னை வந்தார்.
ஆரணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பிய மு.க. அழகிரி அவரது ஆதரவாளர்களே எதிர்பாராத விதத்தில் நேராக கோபாலபுரம் விரைந்தார். அங்கே தன்னுடைய தாயார் தயாளு அம்மாளுடன் சுமார் அரை மணி நேரம் அவர் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ÷
இதுபற்றி கேட்டபோது, அவரது ஆதரவாளர்களிடம் மு.க. அழகிரி ""என்னை கட்சியிலிருந்து நீக்கும் உரிமையே இவர்களுக்கு கிடையாது எனும் போது எனது வீட்டிற்குச் சென்று எனது தாயாரை சந்திக்கக் கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? நான் நாளையும் மீண்டும் என் தாயாரைச் சந்திக்க கோபாலபுர இல்லத்திற்கு வருவேன். இங்கே எனது ஆதரவாளர்களைச் சந்திப்பேன். இதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது'' என்று கோபமாக கூறினார் என்று தெரிகிறது. ÷
அழகிரியின் கோபாலபுரம் விஜயம், கருணாநிதியின் குடும்பத்தில் மட்டுமல்ல திமுகவின் மேல்மட்ட தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 17,258 கோடி லாபம் ஈட்டிய ஹெச்பிசிஎல்!!

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: 3 அறிமுக வீரர்களுடன் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! ராஜஸ்தான் பாஜக நிர்வாகி கைது!

கடந்த 4 ஆண்டுகளாக இபிஎஸ் செய்த ஒரே வேலை நீக்குவதுதான்: சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

