* தொகுதி பெயர்
திருத்தணி
* தொகுதி வரிசை எண்
3
* சிறப்புகள்
ஆந்திர எல்லையோரம் உள்ள திருத்தணி தொகுதி, தமிழக எல்லைப் போராட்டத்தால் நமக்கு கிடைத்த பகுதி. இங்குள்ள திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் அறுபடை வீடுகளுள் ஒன்று.
திருவள்ளூர், பள்ளிப்பட்டு, அரக்கோணம், சோளிங்கர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளும், ஆந்திர மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திருத்தணி தொகுதியில் மறுசீரமைப்புக்குப் பிறகு, பழைய பள்ளிப்பட்டு தொகுதியுடன் திருத்தணி நகராட்சி, திருத்தணி ஒன்றியத்தின் 7 ஊராட்சிகள், திருவாலங்காடு ஒன்றியத்தின் 7 ஊராட்சிகள் சேர்க்கப்பட்டன.
திருத்தணி வட்டம்: தாழவேடு, பொன்பாடி, அலமேலுமங்காபுரம், மத்தூர், கிருஷ்ணசமுத்திரம், சிறுங்குவி, வீரகநல்லூர், சூரியநகரம், அகூர், கோரமங்கலம், தாடூர், வீரகாவேரிராஜபுரம், பீரகுப்பம், டி.சி.கண்டிகை, வி.கே,என்.கண்டிகை, எஸ்.அக்ரஹாரம், செருக்கனூர், சின்னகடம்பூர், பெரியகடம்பூர், கார்த்திகேயபுரம், திருத்தணி, முருக்கம்பட்டு, தரணிவராகபுரம், வேலஞ்சேரி, சத்ரஞ்செயபுரம், கொல்லகுப்பம் பூனிமாங்காடு, நல்லாட்டூர், சிவ்வடா, நெமிலி பட்டாபிராமபுரம், சந்தானகோபாலபுரம்.
பள்ளிப்பட்டு ஒன்றியம்: வெங்கடராஜகுப்பம், வெளியகரம், வடகுப்பம், திருமால்ராஜுபேட்டை, சூரராஜப்பட்டடை, ஸ்ரீகாவேரிராஜு லிங்கவாரிபேட்டை, சாமந்தவாடா, ராமசமுத்திரம், ராமாபுரம், ராமசந்திராபுரம், புண்ணியம், பேட்டைகண்டிகை, பெருமாநெல்லூர், பண்டரவேடு, நெடுங்கல், நெடியம், மேளப்பூடி, குமாரராஜுபேட்டை, கிருஷ்ணமராஜகுப்பம், கேசவராஜகுப்பம், கீளப்பூடி, கீச்சலம், கரிம்பேடு, கர்லம்பாக்கம், காக்களூர், ஜங்காலபள்ளி, அத்திமாஞ்சேரி, கொல்லாலகுப்பம், கொடிவலசா, கொளத்தூர், கோணசமுத்திரம், கொத்தகுப்பம், நொச்சிலி ஆகிய 33 ஊராட்சிகள்.
* வாக்காளர்கள்
ஆண்கள் : 1,35,218
பெண்கள் : 1,38,638
திருநங்கைகள் : 32
மொத்தம் : 2,73,888
* இதுவரை எம்எல்ஏ க்கள்....
1957- எம்.துரைக்கண்ணு (காங்கிரஸ்)
1962- சி.சிரஞ்சீவலு நாயுடு (சுயேச்சை)
1967- கே.விநாயகம் (காங்கிரஸ்)
1971- ஈ.எஸ்.தியாகராசன் (திமுக)
1977- ஆர்.சண்முகம் (அதிமுக)
1980- ஆர்.சண்முகம் (அதிமுக)
1984- ஆர்.சண்முகம் (அதிமுக)
1989- பி.நடராசன் (திமுக)
1991- ராசன்பாபு என்கிற தணிகை பாபு (அதிமுக)
1996- இ.ஏ.பி.சிவாஜி (திமுக)
2001- ஜி.ரவிராஜ் (பாமக)
2006- ஜி.ஹரி (அதிமுக)
2011- மு.அருண் சுப்பிரமணியம் (தேமுதிக)
* தேர்தல் நடத்தும் அலுவலர்/ தொடர்பு எண்
சேதுமாதவன்
திருத்தணி வருவாய் கோட்டாட்சியர்
94450 00411
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.