/

தேர்தலில் 'சீட்' இல்லை: பாமக நிர்வாகி தற்கொலை முயற்சி

பவானி தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், மனமுடைந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.

News image
Updated On :20 ஏப்ரல் 2016, 12:33 pm

ஈரோடு: பவானி தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், மனமுடைந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.

மே மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், பாட்டாளி மக்கள் சார்பில் பவானி தொகுதியில் போட்டியிடுவதற்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.வி.ராமநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநில துணைப் பொதுச் செயலாளர் மகேந்திரன், தனக்கு பவானி தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படாததால் மனமுடைந்து இன்று பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.